காணமால் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு

களுத்துறை – பண்டாரகம , அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் , குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அட்டலுகம – எபிட்டமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய குறித்த சிறுமி நேற்று (27) காலை அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு பொருட்கள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *