50 நாட்கள் நிறைவு காணும் கோட்டா கோ கம : கொழும்பில் இன்று ஒன்பது வீதிகளில் நுழையத் தடை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதிப்போராட்டத்தில் ஈடுபடும் கோட்டா கோ கமவுக்கு இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகின்றன. 

இந்நிலையில் இன்று (28) கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில், கோட்டை பொலிஸார், கோட்டை நீதிவான் திலிண கமகே முன்னிலையில் விடயங்களை சமர்ப்பித்து தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கும்  அருட் தந்தை ஜீவந்த பீரிஸ்,  ரங்க லக்மால், எரங்க குணசேகர,  வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர , ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் அவர்களால் வழி நடாத்தப்படுபவர்களும்  கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட எந்த அரச நிறுவனங்கள், சொத்துக்களுக்கும்  உள் நுழைதல், சேதம் விளைவித்தல், கடமையில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தல், வன்முறைகளில் ஈடுபடல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைவிட கோட்டை பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட,  என்.எஸ்.ஏ. சுற்று வட்டம் முதல் சைத்திய வீதி வரையிலும்,  என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் முதல் ஜனாதிபதி மாவத்தை வரை,  செரமிக் சந்தி முதல் யோர்க் வீதி, பெஸ்டியன் மாவத்தை வரையிலான முதலிகே மாவத்தை,  வைத்தியசாலை வீதி, வங்கி வீதி, பாரான் ஜயதிலக மாவத்தை,  செத்தம் வீதி, கெனல் வீதி ஆகியவற்றில் இன்று 28 ஆம் திகதி பயணிக்கவோ அதற்குள் உள் நுழையவோ கூடாது என நீதிமன்றம்  ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *